இராஜாங்க அமைச்சரும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கனகஹேரத்துக்கு சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் எதிர்ப்பு. சமையல் எரிவாயு சிலிண்டரால் அவரது வாகனம் தாக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்துக்கான லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் பிரதான வினியோக முகவரான இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தனது வாகனத்தில் பயணித்த போது எரிவாயு கொள்வனவிற்காக வரிசையில் காத்திருந்த மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அவர் தொடர்ந்து வாகனத்தை செலுத்த முற்பட்ட போது எரிவாயு சிலிண்டரால் வாகனம் தாக்கப்பட்டுள்ளது. பின்னர் மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பின்னர் அவ்வீதியால் பயணித்த கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதயகாந்த குணதிலக எரிவாயு சிலிண்டர் தாக்குதலை அறிந்து மாற்று வழியில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.