அல்லிராணிக் கோட்டையை குப்பைத் தொட்டியாக்கிய சமூக விரோதிகள்!
மன்னாரில் தமிழர்களின் கலாச்சார சின்னமாகக் கருதப்படும் அல்லிராணிக் கோட்டை குப்பைத் தொட்டியாக மாறி வருகிறது என்று பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மரபுச் சின்னங்களை பாதுக்காக்க வேண்டிய அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பல மரபுரிமைச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டுவருகிறது. தொல்லியல் துறையினர் பல பகுதிகளை ஆக்கிரமித்து தொல்லியல் சின்னங்களை பாதுகாத்து வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் அல்லிராணிக் கோட்டைப் பகுதி கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு அழிவடைந்து வருகிறது. இதனை யாரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.
குறித்த கோட்டை எவ்விதமான பராமரிப்புமின்றி காணப்படுவதுடன் பல இடங்களிலிருந்தும் குறித்த பகுதியில் குப்பைகளும் போடப்பட்டு வருகின்றன என்று மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த கலாச்சார சின்னத்தை பேணிப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.