இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான சமர்ப்பிக்கப்பட்ட புதிய தீர்மானம் இன்று வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது 13 மேலதிக வாக்குகளால் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 07 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் 20 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகி நடுநிலை வகித்துள்ளன.
இந்தியா வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டதுடன் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதவாகவும் புதிய பிரரேணைக்கு எதிராகவும் வாக்களித்திருந்தன.
பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட புதிய பிரேரணை இலங்கையில் வடக்கையும் தெற்கையும் துருவப்படுத்தும் எனவும் இலங்கையின் இறையாண்மைக்கு முரணான இந்த பிரேரணையை தாம் நிராகரிக்கிறோம் எனவும் பேரவையில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளாா்.