டீசல் விலை குறைவின் பயனை மக்களுக்கு வழங்கும் வகையில் பஸ் கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான கணக்கீடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் புதிய பஸ் கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை (01) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .