பாடசாலை நுாலகத்தில் புத்தகம் எடுக்கச் சென்ற மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 61 வயதான நூலகர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் மொரட்டுவவில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.
தரம் 7இல் கல்வி பயிலும் 12 வயதான மாணவியே நூலகரின் அசம்பாவித சம்பவத்துக்கு முகம்கொடுத்துள்ளார்.
மாணவி புத்தகம் எடுப்பதற்காக நூலகம் சென்றபோது நூலகர் மாணவியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று துன்புறுத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து பாடசாலை நூலகரை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது என பொலிஸார் தெரிவித்தனர்.