யாழ்ப்பாணம் – இளவாலை, சேந்தான்குளம் கடலில் மூழ்கி இருவர் நேற்று உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடலில் நீராடச் சென்ற 37 , 21 வயதான ஆண்கள் இருவரே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ் – ஆரியகுளம் பகுதியிலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளரும், அங்கு பணிபுரிபவரும், விடுதியில் தங்கியிருந்த விருந்தினர் ஒருவருமே கடலில் நீராடச் சென்றுள்ளனர்.
அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கியதுடன், அவரைக் காப்பாற்றச் சென்ற மற்றையவரும் நீரில் மூழ்கியுள்ளார்.
நேற்று (20) மாலையில் மீட்கப்பட்ட இருவரிடன் சடலங்களும், யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உயவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.