வரி திருத்த சட்டமூலத்தில் கையொப்பமிட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று (09) தெரிவித்தார்.
இதனிடையே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு ஆடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.
VAT அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவ்வாறு வருகை தர தீர்மானித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.