இளைஞர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் நோக்கில் யாழ்ப்பணம் – ஊரெழுப பகுதியில் இடம்பெற்று வந்து”UCL” பிறிமீயர் லீக் துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு உரும்பிராய் ஈகிள்ஸ் மற்றும் நோர்த் சுப்பிரியர்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
லீக் சுற்றுப்போட்டிகளில் அதிரடிகள் கலந்த அட்டகாசமான தமது ஆட்ட நுட்பத்தால் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்று PLAY OFF சுற்றுப்போட்டிக்கு தகுதி பெற்று, குவாலிபயர் போட்டியில் கல்வியங்காடு சுப்பர்கிங்ஸ் அணியை அபார வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்கு உரும்பிராய் ஈகிள்ஸ் அணியினர் நேரடியாக தகுதி பெற்றுள்ளனர்.
லீக் சுற்றுப் போட்டிகளில் 7 போட்டிகளில் பெற்றியும், ஒரு போட்டியில் சமனிலையும் அடைந்து புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தினைப் பெற்று PLAY OFF சுற்றுப்போட்டிக்கு நோர்த்சுப்பிரியர்ஸ் அணி தகுதி பெற்றிருந்தது.
PLAY OFF சுற்றுப்போட்டியின் முதலாவது எலிமினேற்றர் போட்டியில் ஒளிநிலா அணியை வெற்றி கொண்டு இரண்டாவது எலிமினேற்றர் போட்டியில், கல்வியங்காடு சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு அசத்தலான வெற்றியைப் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சிலவார கால இடைவெளியின் பின்னர் இறுதிப்போட்டி மிகச்சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.