தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக்கழகத்தால் யாழ்.மாவட்ட ரீதியில் நடத்தப்பட்டு வந்த உதைபந்தாட்ட போட்டியில் நாவந்துறை சென்.மேரிஸ் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கியது.
நாமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று (17) மாலை இடம்பெற்ற இறுதிப்போட்டியில் யாழ்.மண்ணில் அசுர பலம் கொண்ட முன்னணி அணிகளான நாவந்துறை சென்மேரிஸ் அணியும், நாவந்துறை சென்.நீக்கிலஸ் அணியும் மோதிக்கொண்டன.
போட்டியின் ஆரம்பம் முதல் சென்.மேரிஸ் அணி வேகமான அபரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியின் கோல்கம்ப எல்லையை ஆக்கிரமித்த வண்ணமே இருந்தது.
போட்டியின், முதற்பாதி ஆட்டத்தில் சென்.மேரிஸ் அணி ஒரு கோலினைப்பெற்று முன்னிலையில் இருந்தது. இரண்டாம்பாதி ஆட்டத்திலும் சென்.மேரிஸ் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தி மேலும் ஒரு கோலினை பதிவு செய்தது.
போட்டியின், நிறைவில் 2:0 என்ற கோல் கணக்கில் நீக்கிலஸ் அணியை வெற்றி கொண்டு சென்.மேரிஸ் சம்பியனாகியது. இறுதிப்போட்டிக்கு விருந்தினராக வலி.வடக்கு பிரதேசபை முன்னாள் தவிசாளர் சுகிர்தன் கலந்து சிறப்பித்தார்.