தென்னிந்திய சினிமாவில் பிரபன இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் இலங்கையில் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (25) சற்றுமுன் அவர் காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
47 வயதுடைய பவதாரணி சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இதேவேளை இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் நேற்றையதினம் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.