நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்
எதிர்வரும் 27ஆம் திகதி (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை குறித்த மாகாணங்களின் பல பகுதிகளில் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
எனவே, நெல் அறுவடை நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் இந்த நாட்களில் அறுவடை செய்தல், காயவிடுதல் போன்ற நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.