திடீரென மயங்கி வீழ்ந்த இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழர் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய தனபாலசிங்கம் சிந்துஜன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் தங்கி இருந்து வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். அவரது மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.