என்னடாப்பா துடியனும் வேற ஏதும் விடயம் ஏலுதலாம் எண்டு யோசிச்சாலும் உந்த தமிழரசிகட்சியின்ட அலப்பறைகள் தான் இப்ப கொஞ்ச நாளா பேசுபொருளா இருக்கிறதால அதைத்தான் எழுத வேண்டியிருக்கு…
நேற்றையோட தமிழரசுகட்சியின்ற பதவிதெரிவுகள் முடிந்தால் தமிழரசு விசுவாசிகளின்ட அலப்பறைகள் இருக்காது எண்டுபார்த்தால் அது இப்போதைக்கு நடக்காது போல இருக்கு.
நேற்றைக்கு தமிழரசுகட்சியின்ட பொதுச்செயலாளர், மற்றைய பதவிகளுக்கான தெரிவுகள் திருகோணமலையில் நடந்தது. பெரிய களேபரத்தின் மத்தியில் இந்தக் கூட்டம் எந்த முடிவும் இல்லாமல் முடிஞ்சிருக்கு.
நேற்றைக்கு 11 மணிக்கு பொதுச்சபைக்கூட்டம் எண்டு அறிவிக்ககப்பட்டிருந்தது. அதன்படி பொதுச்சபை உறுப்பினர்கள் எல்லாரும் இரவோடு இரவாய் திருகோணமலைக்கு வந்திட்டினம்.
ஆனால், பொதுச்சபைக் கூட்டம் எண்டு மட்டும் தான் நடக்கும் எண்டு அறிவிக்கப்பட்ட நிலையில, திடீரெண்டு முதலில் மத்தியகுழுக்கூட்டம் நடக்கும் எண்டு அறிவிக்கப்பட்டு மத்தியகுழுக்கூட்டமும் மாவை ஐயா தலைமையில் தொடங்கிற்று.
பொதுச்செயலாளர் பதவிக்கு யார போடுறண்டு புதிய தலைவர் மத்தியகுழுவிடம் பரிந்துரைக்கு விட்டுள்ளார். உடனே அரியநேந்திரன் ஐயா சிறிநேசன் ஐயான்ட பெயர முன்மொழிஞ்சு இருக்கார்.
உடனே திருகோணமலை தமிழரசுகட்சி மாவட்ட தலைவர் குகதாசன் ஐயா தான் செயலாளர் பதவிக்கு போட்டியிடப்போவதாக தனது விருப்பத்தச் சொன்னார். இதற்கு இடையில சுமந்திரன் எம்.பியும் தான் தலைவர் பதவி கேட்டு தோத்தமையால் தனக்குத்தான் செயலாளர் பதவி பொருத்தம் எண்டு அவர்ட வாயலா கேட்டராம் எண்டு கூட்டத்தில கலந்து கொண்டவை சொலிச்சினம்.
உடனே புதியதலைவர் எல்லாரையும் சமரசம் செய்து ஒரு இணக்கப்பாட்டில பொதுச்செயலாளர் பதவிய வாக்கெடுப்பு இல்லாமல் நடத்த வேண்டும் என்பதற்காக சமரசம் பேச ஆரம்பித்துள்ளார்.
அதன்படி பொதுச்செயலாளராக குகதாசனையும், மற்றைய பதவிகளுக்கு சிலருடைய பெயரையும் சிபாரிசு செய்து ஒருமாதிரி மத்தியகுழுவ சம்மதிக்க வச்சிட்டார்.
ஆனால், முடிவ பொதுச்சபைத்தான் எடுக்க வேணுமல்லோ அதன்படி பொதுச்சபையை கூட்டி மத்தியகுழு முடிவை புதிய தலைவர் சொன்னார்.
இங்கதானாங்கோ பூகம்பம் வெடிச்சுது. பொதுச்செயலாளர் தெரிவ ஏற்கலாது எண்டு திருகோணமலைக்காரரே போர்க்கொடி தூக்க வெளிக்கிட்டினம்.
தொடர்ந்து எல்லாம் சேர்ந்து கத்த வெளிக்கிட்டுது. ஒரு கட்டத்தில பொதுச்செயலாளர் வாக்கெடுப்பில தெரியிற முடிவையும் எடுத்து, வாக்கெடுப்பு நாளைக்கு நடக்கும் எண்டு மாவை ஐயா அறிவிச்சும் போட்டராம்.
அதற்குள்ள சுமந்திரன் எம்.பி நான் தான் இப்ப பதில் செயலாளர் வாக்கெடுப்ப நடத்துவம் எண்டு சொல்லி மததியகுழு எடுத்த முடிவ எத்தினப்பேர் விரும்பிரியல் கையத் தூங்குங்கோ, விரும்பாத ஆட்கள் தூக்குங்கோ எண்டு வாக்கெடுப்பு நடத்தினாரம்.
ஆரம்பத்தில 300 க்கு மேற்பட்ட பொதுச்சபை உறுப்பினர்கள் இருந்த இடத்தில கையத்தூக்கினது 220 பேர் எண்டு சொல்லினம். அதுவும் வாகன சாரதி மார், சில பேர் இரண்டு கைகளையும் தூக்கினவையாம். ஓரே சின்னப்பிள்ளை விளையாட்டுத்தான்.
கையத்தூக்கிப்போட்டு தான் தான் செயலாளர் எண்டு குகதாசன் ஐயா ஊடகங்களுக்கு போட்டி குடுத்தார். சுமந்திரன் ஆதரவாளர்களும் தெரிவுகள் முடிஞ்சு எண்டு புழுகிக்கொண்டு போய்ச்சினம்.
அதுக்குள்ள மாவை ஐயா மாநாடு ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துவிட்டார்.
எண்ணத்தச் சொல்ல , இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று சொன்னவரே முதியவர்கள பதவிக்கு கொண்டுவர ஒற்றைக்காலில நிற்கிறார் எண்டு கூட்டத்தில கலந்து கொண்ட கணபேர் புறுபுறுக்கினம்.
அதுவும் அவைன்ட விசுவாசத்தில இல்லையாம், தண்ட ஆட்கள் எண்டு கொண்டுவந்தால் தானாம் புதிய தலைவர தனக்கு கீழ வைச்சிருக்கலாம் எண்ட நினைப்பிலையாம் எண்டும் கணபேர் கதைக்கினம்.
அவை தான் உசுப்பேத்திவிடுனம் எண்டு பார்த்தால் காலம் காலமாய் பதவில இருக்கிற பெரிசுகளும் விட்டுட்டு போற மாதிரி இல்லை. அவையும் கடசி மட்டும் கெத்துக்காட்டத்தான் நிற்கினம்.
ஒருதரும் விட்டுக்கொடுக்கமால் மாடுகள் மாதிரி கத்தின தான் மிச்சம் எண்டும் கணபேர் பேசினமுங்கோ. முகப்புத்தகம் புள்ளா தமிழரசுகட்சிக்காரர் தங்களே தங்களை வித்துக்கொண்டிருக்கிறாங்கள்.
அதுக்குள்ள சிலபொடிகள பார்த்தால் தாங்கள் தான் தமிழரசுகட்சி உருவாக்கினமாதிரியும், வாயால தன்ன செயலாளராய் போடுங்கோ எண்டு சொன்னவர் சொல்லுறது எல்லாம் வேத வாக்கு எண்டமாதிரி எழுதி தங்கள தாங்களே விசரங்கள் ஆக்கிகொண்டிருக்கினம்.
ஏதோ ஒரு நாட்டின்ட ஜனாதிபதிய தெரிவு செய்யிறதவிடவும் பெரிய அலப்பறைகள் தமிழரசுகட்சியின்ட பதவிகள் தெரிவில நடந்து முடிஞ்சிருக்கு.
உது போற போக்கப்பார்த்தால் இப்போதைக்கு உதுவும் முடியாது. தமிழ் மக்களுக்காகவும் தாங்கள் ஒருதரும் இல்லை எண்டு தமிழரசு கட்சிக்காரத் திரும்ப நிருபிச்சிக்கினம் போல..
என்னத்தான் நடக்கப்போகுது, திரும்பவும் திருகோணமலைல திருவிளையாடல்கள் நடக்கும் போல தான் துடியனுக்கு தோணுது பொருத்திருந்து பார்ப்பம்.
துடியன் நாளைக்கும் வருவான்