வடமராட்சிப் பகுதியில் தலைமுடி வெட்டிய சம்பவம் தொடர்பில் தந்தை கண்டித்தமையினால் 14 வயது சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குதித்த சம்பவம் துன்னாலை வடக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 24 ஆம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பத்தினரால் மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனின்றி நேற்று குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில், 14 வயதுடைய தினேஷ் ஆதவன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சிறுவன் தலைமுடி வெட்டிய நிலையில், அது பாடசாலைக்கு செல்லும் மாணவருக்கு உகந்ததல்ல என்று தந்தை கண்டித்து, மீண்டும் சிகையலங்கார நிலையத்திற்கு கூட்டிச்சென்று மாணவருக்கு உரிய முறையில் தலைமுடி வெட்டிவித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த சிறுவன் தூக்கில் தொக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.