கல்விச்செலவிற்கு பணம் இல்லாத காரணத்தினால் 16 வயதுடைய மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
இம்முறை பொதுப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவியே உயிரிழந்துள்ளார். பதுளை, புவக்கொடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் குறித்த மாணவி,
இம் முறை, க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில், குடும்பப் பொருளாதாரப் பின்னணியால் கல்வி நடவடிக்கையினை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில், குறித்த மாணவி , கணித பாடத்திற்கு பயிற்சி வகுப்புக்கு செல்ல விரும்புவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் மிகவும் கஷ்டத்தில் வாழ்வதால் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல முடியவில்லை என்று அவரது தாயார் கூறியுள்ளார்.
இந்நிலையில், குறித்த மாணவி தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.