நாட்டில் மாகாண சபைத் தேர்தல் அவசரமாக நடாத்தப்பட வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (23.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம். மேலும், தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, உட்பட தமிழ் மக்களின் பலபிரச்சினைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ளோம்.
அத்துடன், நாட்டில் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். 13ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.