கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் எங்கு பாரத்தாலும் தமிழரசு கட்சி தலைவர் தேர்தல் பற்றித்தான் பரவலாக பேசப்பட்டது.
ஒருமாதிரி தேர்தலும் முடிஞ்சுது. சிறிதரன் ஐயாவும் தலைவராய் வந்துட்டார் அதுக்குப்பிறகும் ஓய்ந்த மாதிரி தெரியல. சிறிதரன் ஐயான்ட விசுவாசிகளும், சுமந்திரன் ஐயான்ட விசுவாசிகளும் எண்டு தங்களைத்தாங்களே சொல்லுறவைன்ட அலப்பறைகளே தாங்க முடியல.
தேசியம் வேண்டுட்டு எண்டு ஒரு பகுதியும், துரோகம் செய்து விட்டார்கள் எண்டு இன்னொரு பகுதியும் தங்கட கட்சியை தாங்களே மாறி மாறி வீதியில விற்கினம்.
இதில இருந்து ஒண்டு மட்டும் விளங்குது ஒருதருக்கும் தமிழரசுகட்சில விசுவாசம் இல்லை. தங்கட எஜமான்களுக்கு விசுவாசமாய் இருக்கிற மாதிரி நடிக்கினம் போல.
அதுக்கில அடுத்த போட்டியையும் தொடக்கப்போயினம் தமிழரசுகட்சின்ட விசுவாசிகள். தமிழரசுகட்சியின்ட பொதுச்செயலாளர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் அதுவும் வாக்கெடுப்பு மூலம் தான் நடைபெறப்போகுது எண்டு “துடியனுக்கு” தோணுது.
செயலாளர் தாங்கள் நினைச்ச ஆள் தான் வரவேண்டும் எண்டு தங்களுக்கு ஆதரவானவர்களின்ட பெயர முகப்புத்தகத்தில எழுத தொடங்கிட்டினம் தமிழரசு கட்சியின்ட விசுவாசிகள் எண்டு தங்களைத் தாங்களே சொல்லுறவை.
தலைவர் வடக்குக்கு என்றால் செயலாளர் கிழக்குக்கு என்பது தான் தமிழரசு கட்சியின்ட தொடரும் மரபு. ஆனாலும் அதுவும் மரப்போகுது எண்டுதான் “துடியன்” நினைக்கிறான்.
செயலாளர் பதவிக்கு ஆறு பேருக்கு விருப்பமாய் இருக்குதாம் இதால செயலாளரையும் வாக்கெடுப்பு மூலம் தான் தெரிவு செய்யவேண்டும் என்று தகவல் உலாவருது.
போறப்போக்கைப்பார்த்தால் தமிழரசுகட்சியின்ட உறுப்பினராய் வாரது எண்டாலும் வாக்கெடுப்பு நடத்த வேணும் போல… ஆ சரி என்னதான் நடக்குது எண்டு நாளைக்கு மட்டும் இருந்து பார்ப்பம்…
நாளைக்கும் துடியன் வருவான்