அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் – நவக்கிரி பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலானது நேற்று(15.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாத தெரியவருகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பெற்றோர் குண்டு வீசி தீயிட்டு எரித்ததுடன் வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் என்பவற்றையும் கூரிய ஆயுதங்களால் உடைத்து சேதமாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.