வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் மாலைநேர கல்வி திட்டம் ஒன்று நேற்று (05) பிற்பகல் 4:30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நாம் செய்வோம் அமைப்பு அனுசரணையில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினரால் இணைந்து தொடக்கி வைக்கப்பட்ட குறித்த குறித்த மாலை நேர கல்வித் திட்டத்தில் தரம் 1 முதல் 5 வரையான நாற்பது மாணவர்கள் பங்கு கொண்டுள்ளனர்.
மகாத்மா சனசமூக நிலைய தலைவர் திரு யோகநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அரசியல் ஆய்வாளர் சி.ச.ஜோதிலிங்கம், மருத்துவர் க.பவணந்தி, முன்பள்ளி ஆசிரியை திருமதி சுகந்தினி ஜெகதாசா, மாலை நேர கல்வித்துறையின் ஆசிரியை அருணா கந்தசாமி, கராத்தே யோகா ஆசிரியர் பே.வில்வம் உட்பட்ட பலரும் கலந்து கொண்டனர்.