இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் மின்சார விநியோகத்தை மேற்கொள்வது மிகவும் கடினமாக உள்ளதாக இலங்கை மின்சாரசபைத் தலைவர் எம்.சி.பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
மின்சார சபை நெருக்கடியில் உள்ளதென்பதனை மறைக்க முடியாது. நிதி நெருக்கடி அதிகமாக உள்ளது. கொரோனா காலத்தில் சுற்றுலா ஹோட்டல் உட்பட பல முக்கிய இடங்களில் மின்சாரக் இன்னமும் கட்டணம் செலுத்தப்படவில்லை. இதனால் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முடியாத அளவு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஒரு ஜெனரேட்டரையும் புனரமைக்க முடியாததாலும் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.