மாணவர்களின் கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சமூக கொடையாளர்களின் அணுசரனையுடன் புதுயுகம் இணையத்தளமும், அறம் பழகு அறக்கட்டளையும் இணைந்து இவ் கருத்தரங்கை ஒழுங்கமைக்கின்றது.
இலங்கையின் புகழ் பூத்த வளவாளர்களின் ஒருங்கிணைந்த சேவையில் 2022 ஆம் ஆண்டு மாசி மாதம் இடம்பெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முற்றிலும் இலவசமான விசேட இறுதிக்கருத்தரங்கு.
நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் இக் கருத்தரங்கு zoom மூலம் ஒழுங்கு செய்யப்படுகின்றது.
இலங்கையில் மிகவும் பிரபல்யமான வளவாளர்களினால் இக்கருத்ரங்கு நடத்தப்பட உள்ளதால் இறுதிப் பரீட்சைக்கான எதிர்பார்க்கை வினாக்களுடனான விசேட கருத்தரங்காக இது அமையவுள்ளது.
எனவே, இக் கருத்தரங்கில் பங்கு பற்றி சிறப்பான பெறுபேற்றினைப் பெற விரும்பும் வர்த்தகம், மற்றும் கலைப்பிரிவு மாணவர்கள் தங்களுடைய விபரங்களை எமக்கு உடன் அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய விபரங்கள்
01. மாணவரது முழுப்பெயர்
02. தெரிவு செய்த பாடத்துறை
03. கற்கவுள்ள பாடங்கள்
04. whats app உள்ள தொலைபேசி இலக்கம்
என்பவற்றை விரைவாக 0763972847 என்ற whats app இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.
முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இக்கருத்தரங்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பாகி இடம்பெறவுள்ளது.
கருத்தரங்குகளை நடத்தவுள்ள இலங்கையின் முண்ணனி வளவளார்களின் விபரங்கள் மற்றும் நேர அட்டவணைகள் விரைவில் வெளியிடப்படும்.
இக்கருத்தரங்கில் பங்கு பெற்றுவதற்கு சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் விசேட ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும்