கண்டி பாடசாலையில் 16 வயதுடைய மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது கண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி, கத்திக்குத்து சம்பவத்திற்கு இலக்கான மாணவர் கண்டி பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, தகராறுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.