தாய்வான் தீவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளதுடன் , 800இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
25 ஆண்டுகளுக்குப்பின் ஏற்பட்டுள்ள இச்சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.4 ரிக்டர் அளவில் 7.4ஆக பதிவாகியதுடன் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இன்று காலை (03) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ள நிலையில் தாய்வான் மற்றும் ஜப்பான் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.