தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் நாட்டின் வருடாந்த பணவீக்கம் ஜூலை 2024 இல் 2.5% ஆக சற்று அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வருடாந்த பணவீக்கம் ஜூன் 2024 இல், 2.4% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 2024 இல் 1.9% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூலை 2024 இல் 2.9% ஆக அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 2.7% இல் இருந்து 2024 ஜூலையில் உணவு அல்லாத பணவீக்கம் 2.2% ஆகக் குறைந்துள்ளதாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.