எரிபொருள் மற்றும் உரத்திற்கு மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த சலுகைகள் இன்று (22.8.2024) முதல் நடைமுறையாகும் வகையில் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்றொழிலாளர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 25 ரூபா மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன், தேயிலை உற்பத்தியாளர்களுக்கு 4,000 ரூபா உர மானியம் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, சேதமடைந்த பயிர்களுக்கான நட்ட ஈடாக ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், வறட்சி, வெள்ளம் மற்றும் வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.