கொழும்பில் இருந்து பண்டாரநாயக்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலுடன் குடஹகபொல ரயில் கடவையில் (லைட் என்ட் பெல் ) பாதுகாப்பற்ற முறையில் பயணித்த கார் ஒன்று மோதியதில் நான்கு பேர் காயமடைந்து சீதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது காரில் நான்கு பேர் பயணித்துள்ளதுடன் நால்வரும் காயமடைந்து சீதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காரின் சாரதி, சமிக்ஞைகளை கவனிக்காத காரணத்தினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எரிபொருள் போக்குவரத்து ரயில் கட்டுநாயக்கவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், விபத்து காரணமாக புத்தளம் மார்க்கத்தில் இயங்கும் ரயில் தடைப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.