மன்னார் மாவட்டச் செயலர் நியமனத்தில் நீண்ட மாதங்களாக தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலராக கடந்த 21 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவிடமிருந்து நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் அவர் இன்று (23) தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து புதிய மாவட்டச் செயலரை அதிபரை வரவேற்கும் நிகழ்வு மாவட்ட செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.