அரச ஊழியர்களுக்கு 2025 ஜனவரி முதல் சம்பளத்தை 24% ஆக அதிகரித்து அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற 17,800 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 25,000 வரை அதிகரிப்போம். அனைத்து அரச ஊழியர்களின் குறைந்த பட்ச அடிப்படைச் சம்பளம் 57,500 ரூபாவாக அதிகரிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பத்தாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (23) பிற்பகல் வரகாபொல நகரில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகள் மாத்திரம் வழங்கப்படுவதோடு மேலதிக வருமானங்கள் இல்லை. சம்பளத்திற்கான வரி அளவிடப்படுகின்ற போது அவர்களால் சிறந்த அரச சேவையை வழங்கக்கூடிய மனநிலை கிடைப்பதில்லை.
அதனால் நாம் இந்த சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு மேலதிகமாக அரச சேவையை நவீன மயமாக்கி e-ஸ்ரீலங்கா, e-கவர்ன்மென்ட் வேலை திட்டங்களின் ஊடாக சிறந்த அரச நிர்வாகத்தையும், சிறந்த பயிற்சிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
அரச ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கல்வியும் பாதுகாப்பும் வழங்கப்படும். இவை வாக்குறுதிகள் அல்ல. நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் ஆகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாட்டையும் அதிகாரத்தையும் கைப்பற்ற விரும்புகின்ற மத நம்பிக்கையற்றவர் மத உரிமைக்கும் அழுத்தம் விடுகின்றார்
இந்த நிலையை தோற்றுவிக்க நடவடிக்கை எடுத்து வரும் அரச அதிகாரிகளுக்கு எதிராக எமது ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.