சவூதி அரேபிய பாலைவனத்தில் நான்கு நாட்களாக, வழி தெரியாமல் தவித்துவந்த இளைஞனொருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த முகமது ஷேசாத் கான் என்ற 27வயதுடைய இளைஞன், சவூதி அரேபியாவில் தொலை தொடர்பு நிறுனத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்னர் உலகின் மிகவும் ஆபத்தான பாலைவனங்களில் ஒன்றான ரப் அல் காலி பாலைவனத்துக்கு சென்றுள்ளார்.
சுமார் 650 கிலோ மீற்றர் பரப்பு கொண்ட இந்த பாலைவனம் நஜ்ரான் மாகாணங்கள் உட்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் யேமன் வரை நீண்டுள்ளது.
இந்த பாலைவனத்திற்கு, முகமது ஷேசாத் கான் சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு வர வழி தெரியத நிலையில் அங்கு சுற்றிதிரிந்துள்ளார். விடா முயற்சியாக 4 நாட்களாக போராடிய நிலையில் அவரால் வீட்டுக்கு திரும்பும் வழியை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.
பாலைவனம் என்றதும் தண்ணீர் இருக்காது, வெயில் கொளுத்தும் என நம் அனைவருக்கும் தெரியும். அவர் உணவு, தண்ணீர் இல்லாமல் நான்கு நாட்கள் தவித்து வந்த நிலையில் அவர்உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பாலைவன மணல் திட்டுகளில் இரு சக்கர வாகனமொன்றின் அருகேயிருந்து அவரது சடலத்தை அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
ஊர் விட்டு ஊர் பிழைக்கப்போன இடத்தில், ஷேசாத் கானுக்கு நேர்ந்த துயரம், அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.