15 வயதுடைய மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பதில் நீதவான் நளின் இம்புல்கொட உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் ஹொரணை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
42 வயதான ஆசிரியர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்துக்கு உள்ளான மாணவியின் தாயும் தந்தையும் வெளிநாட்டில் உள்ளனர் எனவும், தாயின் சகோதரி பராபரிப்பில் சிறுமி வசித்து வருகிறார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆசிரியர் “உன்னை பார்க்காமல் என்னால் வாழ முடியாது”, “நீ வாசனையாக இருக்கிறாய்.” உள்ளிட்ட பல குறுஞ்செய்திகளை மாணவி அனுப்பி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் சிறிய தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.