முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் நாள் அகழ்வு பணியானது இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த பகுதியில் கொக்கிளாய் முல்லைத்தீவு பிரதான வீதியில் காப்பற் இடப்பட்ட குறிப்பிட்ட ஒரு பகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் மனித எச்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது . இந்த பகுதிக்கு மேலாக புதிதாக தகர கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
அகழ்வு நடவடிக்கையின் போது பச்சை நிற ஆடைகள் வெளித் தெரிந்திருந்தது.. இன்றைய அழ்வின் போது மிகுதி உடற்பாகங்கள் முழுமையாக எடுக்கப்படும் என நம்பப்படுகிறது. இன்று காலை மூன்றாம் நாள் அகழ்வு பணி நடைபெற இருக்கின்றது.
கொக்குதொடுவாய் மனித புதைகுழி இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பண பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் வியாழக்கிழமை (04) மூன்றாம் கட்ட அகழ்வுபணிகள் ஆரம்பமாகி நேற்று வெள்ளிக்கிழமை (5) இரண்டாம் நாள் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.