இலங்கை மின்சார சபையின் 15 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மின்சார சபையின் காசாளர்களே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சுகயீன விடுமுறையை பதிவு செய்து, அண்மையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் பங்குபற்றிய குற்றச்சாட்டில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோருக்கு இடையூறு ஏற்படும் வகையில் அவர்கள் செயற்பட்டுள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, ஊழியர்கள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டமையை கண்டித்து கடும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.