யாழ்ப்பாணம் – அரியாலை – கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு – உடையார்கட்டுப் பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட தகராறு அதிகரித்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பாக 34 வயதான சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.