பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து உணவு மற்றும் மருந்துகளை வழங்க முடியாமல் அவதியுறும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது தவறாக இருந்தால், அதனை பொறுப்பேற்க தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொத்துவிலில் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் `இயலும் ஸ்ரீலங்கா’ என்ற கருத்திற்கு வலுசேர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு மக்கள் பேரணி அம்பாறைபொத்துவில் ஜலால்தீன் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு அங்கிருந்த மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது . அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் இதில் இணைந்து கொண்டது.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, “நான் திருடர்களுடன் வேலை செய்தேன் என்று சஜித் கூறுகிறார். பேராசைப்பட்டு இந்த பதவியை எடுத்தேன் என கூறுகின்றார். அவருக்கான பதவியை நான் பறித்தேன் என்றும் கூறுகிறார். அவர் எப்போதும் ஏழைகளைப் பற்றி பேசுகிறார். எனவே அவருக்கு அந்த வருத்தம் புரியவில்லையா?” என்றார்.
கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் பெயரிலான வங்கிக் கணக்குகளில் வைப்புத்தொகை மூலம் மட்டுமே வரி செலுத்துதல்களை மேற்கொள்ள வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளது.
எந்தவொரு பணமும் அல்லது காசோலைகளும் தங்கள் அதிகாரிகளால் நேரடியாக வசூலிக்கப்படுவதில்லை என்றும் அதிகாரிகள் போல வரும் நபர்களிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.