யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞனை மீட்டு , யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்தார்.
பரிசோதனையின் போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவர் டெங்கு நோய் தீவிரமான நிலையில் யாழ்ப்பபண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று அந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அண்மைய தினங்களாக யாழில் டெங்குத் தொற்று அதிகரித்து வருகின்றமையும் டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.