பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று, நேற்று (01) பிற்பகல், பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
நாட்டின் கல்வித்துறையை அபிவிருத்தி செய்தல், தொழிற்பயிற்சியை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, ஜேர்மன் தூதுக் குழுவின் பிரதானி ஒலாப் மல்வோ, அரசியல் விவகாரம் தொடர்பான ஆலோசகர் தாரிணீ தலுவத்த, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்காவின் பணிப்பாளர் ச்சதுர பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.