பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று(10) சமர்ப்பிக்கப்பட்டது.
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த கால அவகாசம் வழங்கப்பட்டு, அதன் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் முன்னெடுக்கப்படுமென நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
இதனிடையே, பெறுமதிசேர் வரிக்கு(VAT) உள்ளாக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைமாற்றம் இதுவரை சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் இன்று(10) தெரிவித்தார்.