By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: தமிழரசுக்கட்சியில் போட்டியிருவோருக்கு திறந்த கடிதம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

தமிழரசுக்கட்சியில் போட்டியிருவோருக்கு திறந்த கடிதம்!

Published January 20, 2024
Share
3 Min Read
SHARE

தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிடும் மூன்று வேட்பாளர்களுக்கும் ஒரு திறந்த கடிதம் எனும் தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் ம.செல்வின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினைத் தெரிவு செய்யும் தேர்தல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் குறித்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினைத் தெரிவு செய்யும் போட்டியில் குதித்துள்ள மதிப்பிற்கும் அன்புக்கு உரிய மூவருக்கும் அன்புடனும் நட்பார்ந்த உரிமையுடனும் நெருக்கடிமிகு தருணத்தில் தமிழர் தேசத்திற்கான கடமையாகவும் எண்ணி இந்த திறந்த கடிதத்தை வரைகின்றேன்.

இதனை ஒரு ஆலோசனையாகவும் வேண்டுகோளாகவும் தேசமக்கள் மனநிலையாகவும் நீங்கள் கொள்வீர்கள் என நானும் என்னையொத்த கருத்துடையவர்களும் முழுமையாக நம்புகின்றோம்.

ஈழத்தமிழரின் இறைமையுடன் கூடிய அரசியல் விடுதலைக்கான பயணத்தை கால்கோளிட்டு தொடங்கியது தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக்கட்சி என்ற இயக்கம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது.

இலங்கையின் அரசியல் செயன்முறைக்குள் தன்னை முழுமையாகவும் சனநாயக வழியிலும் அர்ப்பணிப்பதற்காக இலங்கையின் தேர்தல் சட்டங்களுக்கமைய ஒரு தேர்தல் கட்சியாகவும் பதிந்துகொண்ட தமிழரசுக்கட்சி தனது தேர்தல் அபிலாசைகளுக்கும் அப்பால் ஈழத்தமிழர்களின் அரசியல் வேட்கைகளை வென்றெடுக்க பல்வேறு வழிமுறைகளையும் காலத்திற்கு காலம் முன்னெடுத்து அதனூடாக பல சாதகமான விளைவுகளை தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது.

இங்கு நான் தமிழரசுக்கட்சியின் வரலாற்றினையோ ஈழத்தமிழ்மக்களின் போராட்டங்களை வீரியம் மிக்கதாக மாற்றிய பல்வேறு தேசிய விடுதலை அமைப்புக்களின் வரலாற்றையோ பேச முனையவில்லை.

ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றுத் தொடர்ச்சிக்கு ஜனநாயக பண்புகளும் அறிவும் புலமையும் மக்கள் மீதான பற்றும் கொண்ட தலைமைத்துவங்களால் தமிழரசுக்கட்சி ஆற்றிய பங்கும் தொடர்ச்சியும் இருப்பும் என்றும் முதன்மையானதாக அமைகின்றது.

இத்தகைய சூழ்நிலையில் மிக நீண்டகால தேக்கநிலைக்குப்பின் தமிழரசுக்கட்சி தனக்குரிய தலைமைத்துவத்தினை தேடுவதும் அதனை தொலைநோக்குடன் கையாளுவதும் மிகவும் முக்கியமாக உள்ளது.

இதனை வெறுமனே ஒரு அரசியற் கட்சியின் உள்ளகப் பிரச்சனையாகவோ தாயகத்திலும் புலத்திலும் வாழும் சுமார் இருபத்தைந்து இலட்சம் மக்களில் வெறுமனே ஒரு நான்காயிரம் பேரினை அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு சிறு அரசியல் குழுவினரின் தனியுரிமையான விடயமாகவோ கருதி ஈழத்தமிழ்ச்சமூகத்தின் அரசியல் விடுதலையிலும் பொருண்மிய மேம்பாட்டிலும் பண்பாட்டுச்செழுமையிலும் இச்சமூகத்தை பூகோளத்தின் முதன்மைச் சமூகங்களில் ஒன்றாக நிலைநிறுத்த பேரவாக்கொண்ட எவரும் ஒதுங்கி நின்றுவிடமுடியாது என்பது எனது உறுதியான கருத்து.

எனினும் இந்த நெருக்கடியான நிலைமையில் யாரையும் விமர்சிப்பதற்குரிய தருணமாக இதனை மாற்றுவது மிகவும் அபத்தமானதாகவே இருக்கும்.

தற்போது உங்கள் மூவருக்கிடையில் உக்கிரமடைந்துள்ள போட்டியும் அதன்காரணங்களினால் முனைப்படைந்துள்ள பிரச்சார முயற்சிகளும் கருத்துப்பரவல்களும் மிகவும் ஆபத்தான கீழ்நிலை நோக்கி கட்சியினை இழுத்துச் செல்வதனை தெளிவாக என்னால் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இது உங்களுடைய தலைமைத்துவத்தை வேண்டிநிற்கும் ஆதரவுச்சிந்தனை கொண்ட கட்சியின் அங்கத்தவர்களிடையே நிரந்தரமான பிளவினையும் கூர்மையான முரண்பாடுகளையும் உருவாக்கி வருகின்றது என்பதனை நீங்களும் கூட முழுமையாக அறிவீர்கள்.

அத்துடன் இத்தகைய நிலைமையில் கட்டற்ற சுதந்திரத்துடனும் பொறுப்புக்கூறல் கடப்பாடுகள் ஏதுமற்ற இலத்திரனியல் சமூக ஊடகங்களில் நிரம்பியுள்ள வக்கிரமான சிந்தனைகொண்டவர்களுக்கும் ஈழத்தமிழரின் அரசியல் வேட்கையினை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கும் உங்களுக்கிடையிலான போட்டியின் உக்கிரம் ‘வெறும் வாய்க்கு அவலாக’ மாறியுள்ளது. இவற்றினால் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஈழத்தமிழ் சமூகம் தனது சக்தியை பெருமளவில் விரயமாக்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் அகத்திலும் புலத்திலும் இந்த நெருக்கடியை மிகவும் சாதுரியமாக கடந்து செல்லவேண்டியுள்ளது. அதனை ஈழத்தமிழர்கள் எவ்வாறு கடந்து செல்லப் போகின்றார்கள் என்பதனை எம்மவர்கள் மட்டுமல்ல எம்மில் அக்கறை கொண்ட சர்வதேச சமூகமும் எம்மைப் பலவீனப்படுத்தி அழிக்கநினைக்கும் சக்திகளும் துல்லியமாக அவதானித்துக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய நிலைமையில் தான் நான் ஒரு திறந்த கடிதம் ஒன்றை தங்களுக்கு வரைந்து பின்வரும் விடயங்களில் தங்களது ஆக்கபூர்வமான முயற்சியை கோருகின்றேன். நான் இக்கடிதத்தில் உங்கள் மூவரின் பெயரினை குறிப்பிடும்போது இருக்கக்கூடிய ஒழுங்கும் கூட சிலவேளையில் தவறான ஊகத்திற்கு வித்திடலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே போட்டியிடும் மூவர் என உங்களை விளித்துள்ளேன். என்றவாறாக பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

Editor S.Shanuja January 20, 2024 January 20, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article இலத்திரனியல் கடவுச்சீட்டு விரைவில்!
Next Article நாரம்மல துப்பாக்கிச்சூடு; பொலிஸ் அலுவலர் தற்காலிக பணிநீக்கம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?