எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பு பிளவர் வீதியில் உள்ள அவரது அரசியல் காரியாலயத்தில் சந்தித்து அவருக்கு ஆதரவு வழங்குவதாக விமலவீர உறுதியளித்தார்.