பதவி விலக மாட்டேன். இடைக்கால அரசுக்கும் நானேதான் பிரதமர்!
அரசியல் வரலாறு தெரியாத ஒரு சிலர் என்னைப் பதவி விலகுமாறு வலியுறுத்தலாம்.இது தொடர்பில் என்னிடம் எவரும் கோரிக்கை விடுக்கவில்லை. இடைக்கால அரசு அமைந்தால்கூட அதுவும் எனது தலைமையிலேயே மலரும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஆளும் கட்சியுடன் பேச்சு நடத்த முன்வரவேண்டும். அலரி மாளிகைக் கதவு திறந்தே உள்ளது. அப்போது தான் தீர்வைத் தேடலாம். பேச்சுக்கு வராவிட்டால் போராட்டத்தை தொடரவேண்டித் தான் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.