அடுத்தவருடம் நாட்டில் ஒரு இறாத்தல் பாணின் விலை 200 ரூபாவாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் முக்கியமான 50 பொருளாதார கேந்திர மத்திய நிலங்களை விற்பனை செய்வதற்கு நகர அபிவிருத்தி திணைக்களத்தினால் பகிரங்கமாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எவ்வித கட்டுப்பாடுகள் இல்லாமால் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்லுமாயின் அரசாங்கம் எதற்கு? நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை எதற்கு? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த வருடம் ஒரு இறாத்தல் பாணின் விலை 200 ரூபாவாக எகிறும். எரி பொருட்களின் விலையும் தொடர்ச்சியாக அதிகரிக்கின்றது.
உலக சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பதால் உள்நாட்டிலும் விலைகளை அதிகரிக்கின்றோம் என்று சாட்டுச் சொல்லிக் கொண்டு இருக்கக்கூடாது.
வேறு நாடுகளில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருந்தால் அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோரி விட்டு பதவிவிலகியிருக்கும்.
ஆனால் எங்கள் நாட்டில் நிதி அமைச்சர் உட்பட அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்” என்றார்.