• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Monday, October 2, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home செய்திகள் யாழ்ப்பாணம்
ஆரியகுளத்தை கையகப்படுத்த முயற்சித்தால் புனித நீர் நிலையாக மாற்றப்படும்

ஆரியகுளத்தை கையகப்படுத்த முயற்சித்தால் புனித நீர் நிலையாக மாற்றப்படும்

சிவாஜிலிங்கம் ஆவேசம்

admin by admin
January 6, 2022
0

யாழ்ப்பாணம் ஆரிய குளத்தில் மதச் சின்னங்களை திணிப்பதற்கு அரசு முனைந்தால், இறந்தவர்களின் அஸ்தி கரைக்கும் புனித நீர் நிலையாக மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக்கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடகமையத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

READ ALSO

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

யாழில் இளம் குடும்பஸ்தர் படுகொலை!

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாணம் ஆரிய குளம் எமது பாரம்பரியம். அது சேற்று குப்பைகளுடன் காணப்படும் போது ஒருவரும் திரும்பி பார்க்கவில்லை. அதன் பின்னர் யாழ் . மாநகர சபையின் முயற்சியால், தற்போது அழகாக சீரமைக்கப்பட்டு மக்கள் தமது பொழுது போக்கு நேரத்தை செலவழிப்பதற்காக அங்கு வருகின்றனர்.

ஆனால், வடக்கு மாகாண ஆளுநர் தற்போது தூக்கத்திலிருந்து விழித்தது போல புது புரளியை கிளப்பியுள்ளார் .

ஆரிய குளம் மாநகர சபைக்கு சொந்தமானது என ஆவணங்களை சமர்ப்பியுங்கள், சமய சின்னங்கள் தொடர்பாக வெளிப்படுத்துங்கள் என வடக்கு மாகாண ஆளுநர், மாநகர சபைக்கு கடிதம் ஒன்றை தற்போது அனுப்பியுள்ளார் .

அன்று ஆரியகுளம் சீரமைக்கப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வுக்கு ஆளுநர் வருகை தந்தபோது, அவருக்கு தெரியவில்லையா? இது யாருடைய சொத்து என்று, ஆரிய குளம் எமது சொத்து அதையும் அரசு கையகப்படுத்தப் பார்க்கிறது. எமக்கு தெரியும் வடக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதி கோட்டாவின் எடுபிடி. அவர் தன்னுடைய நிர்வாக வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும்.

எமக்கு விளையாட்டு காட்ட வேண்டாம். மாநகர முதல்வரை பணியவைக்கும் செயற்பாட்டுக்கு தமிழ் மக்கள் துணைபோக மாட்டார்கள். பௌத்த மக்கள் வழிபடுவதற்கு அருகில் நாக விகாரை உள்ளது. போய் வழிபடட்டும் நாம் அதைப்பற்றி ஏதும் கேட்வில்லை. கண்டி வாவியில் பிள்ளையார் கோவில் கட்ட விடுவீர்களா? ஏன் இப்போது இங்கு வந்து புது புரளியை ஆளுநர் கிளப்புகின்றார்.

மதச் சின்னங்கள் தொடர்பில் அவர் பிரச்சினை செய்வாரானால், மக்களின் புனித அஸ்தி கரைக்கும் இடமாக ஆரிய குளத்தை மாற்ற வேண்டி வரும். அன்று திறப்பு விழாவுக்கு வருகை தந்தவர் , இப்பொது விடிய விடிய ராமர் கதை கேட்பது போல , இந்த குளம் யாருடையது என்று கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வர முடியுமா. அவரின் வாகனச் செலவு 58 லட்சம், அதற்கு மேலதிகமாக பாதுகாப்பு பிரிவு, இதுவும் போதாதென்று தான் அணியும் ரீசேட்டுக்கு 7 ஆயிரம் செலவு, மோப்ப நாய்கள் என்று ஆடம்பரமாக ஆளுநர் திரிகின்றார் .

அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் நடக்கிறது. அவருக்கு எதற்கு மோப்ப நாய்கள். வெடி குண்டு வைத்து விடுவார்கள் என்று பயமா அல்லது வெடிகுண்டு வைக்க வேண்டும் என எதிர்பார்கிறீர்களா அப்படியானால் போட்டிவைத்து பாருங்கள் வெடிக்குறதா இல்லையா என்று, அதை விடுத்து மக்களை துன்பப்படுத்தாதீர்கள். மக்களின் பிரச்சினையை முதலில் பாருங்கள், சம்பளத்தை எடுத்துவிட்டு முடங்கிக்கிடக்காமல் மக்கள் தேவைகளை அறிந்து செயற்படுங்கள். மதப்பிரச்சினையை தூண்டாதீர்கள்.

வடக்கில் தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் இந்துமத ஸ்தலங்கள் ஆக்கிரமிக்கப்படும் போது எங்கு சென்றீர்கள்? இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கும் ஆக்கிரமிப்புக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அவை உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? தேவை இல்லாத வேலை பார்க்காமல் உங்களுக்கு இருக்கும் வேலையை பாருங்கள்.

ஆளுநரை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுகிறோம். இல்லை என்றால் இவர் போகும் இடம் எல்லாம் பிரச்சினை ஏற்படும் நிலை வரும் – என்றார்.

Tags: சிவாஜிலிங்கம்
ShareTweetPin

Related Posts

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!
செய்திகள்

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

September 26, 2023
தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!
செய்திகள்

யாழில் இளம் குடும்பஸ்தர் படுகொலை!

July 10, 2023
யாழ் பொது நூலகம்  எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல்  அனுஷ்டிக்கப்பட்டது!
செய்திகள்

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட 42ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது!

June 1, 2023
தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!
செய்திகள்

யாழில் கடன் தொல்லையால் உயிர் மாய்த்த குடும்பஸ்தர்!

May 30, 2023
33 அழகிகள் கைது
Breaking news

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் விபச்சாரம்!

May 30, 2023
நாளை முதல் விசேட நடவடிக்கை:யாழ் பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடி உத்தரவு!
Breaking news

நாளை முதல் விசேட நடவடிக்கை:யாழ் பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடி உத்தரவு!

May 30, 2023
Next Post
அனல் பறக்கும் இறுதிப்போட்டி

அனல் பறக்கும் இறுதிப்போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.