• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Saturday, March 25, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home ஆன்மீகம்
உங்கள் வீட்டிலும் மஹாலக்ஷ்மி கடாட்சம் பெருக வேண்டுமா!

உங்கள் வீட்டிலும் மஹாலக்ஷ்மி கடாட்சம் பெருக வேண்டுமா!

admin by admin
September 10, 2022
0

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.

READ ALSO

இறை வழிபாடு செய்தும் துன்பங்கள் தொடர்வது ஏன் தெரியுமா?

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது!

எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார்.

மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.

அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.

எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம்.

இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

*‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.

Tags: உங்கள் வீட்டிலும் மஹாலக்ஷ்மி கடாட்சம் பெருக வேண்டுமா!
ShareTweetPin

Related Posts

இறை வழிபாடு செய்தும் துன்பங்கள் தொடர்வது ஏன் தெரியுமா?
ஆன்மீகம்

இறை வழிபாடு செய்தும் துன்பங்கள் தொடர்வது ஏன் தெரியுமா?

September 10, 2022
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது!
ஆன்மீகம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது!

August 25, 2022
செவ்வாய்க்கிழமை விரதத்தின் மகிமை! ஓம் சரவணபவ!
ஆன்மீகம்

செவ்வாய்க்கிழமை விரதத்தின் மகிமை! ஓம் சரவணபவ!

January 26, 2022
Next Post
இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு  ஐ.நா உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும்_சர்வதேச மன்னிப்புச் சபை!

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும்_சர்வதேச மன்னிப்புச் சபை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.