இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி புரியும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா வை , வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் , அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது ஆளுநரால் இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி புரியும் என தெரிவித்த உயர்ஸ்தானிகர், விசேடமாக வடக்கு மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.