கிளிநொச்சி மாவாட்டத்தில் பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல தடவைகள் இம்முறை இயற்கை தாண்டவத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்பொழுது பெரும்போக அறுவடை செய்து வருகின்றனர்.
அறுவடை செய்யப்பட்டு வரும் நெல்லினை தற்பொழுது ஒரு ஏக்கருக்கு 5, 6 மூடைகள் அறுவடை நடைபெற்று வருவதாகவும் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை தற்பொழுது இடைத்தரகள் 5000 ஆயிரம் தொடக்கம் 6500 வரையே கொள்வனவு செய்கின்றனர்.
இந்த விலைக்கு நெல்லிணை விற்பனை செய்தால் அறுவடை செய்த கூலியை கூட வழங்க முடியாத நிலையில் விவசாயிகள் தள்ளப்படுவார்கள் எனவும் கடந்த வருடம் அறுவடையில் ஒரு ஏக்கர் ஒன்றுக்கு 25 தொடக்கம் 30 மூடைகள் அறுவடை செய்த வயல்களில் தற்பொழுது 5 மூடை அல்லது 6 மூடை நெல் அறுவடையாகின்றது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இம்முறை மானிய உரத்திற்கான கொடுப்பனவும் பலருக்கு வழங்கப்படவில்லை எனவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அரசாங்கத்தினை நம்பி எந்தவித நன்மைகளோ கிடைக்கப்படுவதில்லை. விவசாயிகள் தொடர்ச்சியாக பல்வேறு வகையிலும் பாதிக்கப்படுவதும் ஊடகங்கள் வாயிலாக குரல் கொடுப்பது மாத்திரமே மிஞ்சிஉள்ளது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் அரசாங்கமும் இயற்கையும் தம்மை வஞ்சித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.