குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தால் இன்று கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹியூமன் இம்யூனோகுளோபுலின் என்ற மருந்தை இறக்குமதி செய்தமை தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சந்திரகுப்த இன்று (18) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.