இரண்டு வாரங்களுக்குள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (14) காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள், கால அட்டவணைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் என்பனவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்த முடியும் என்றார்.