சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி மீனாட்சி அம்மன் ஆலயம் வரை சென்றது.
அங்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நினைவாக சிதரு தேங்காய் உடைக்கப்பட்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டது. அதில் சர்வதேசமே எமக்கு உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என தெரிக்கப்பட்டது.
இதன் போது அரசியல் பிரமுகர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டு உணவுபூர்வ தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.