சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ICC) பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் அலடிஸ் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கையின் கிரிக்கெட் தடை மற்றும் அது குறித்து மேற்கெள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இதன்போது சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக விளையாட்டு அமைச்சர், தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு தெரிவித்துள்ளார்.