வரி செலுத்துனரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை (ID) வரி செலுத்துனர் அடையாள இலக்கமாக (Taxpayer Identification Number-TIN ), பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவ்விலக்கத்தை பொதுமக்களின் தரவுகளைப் பேணும் அரச நிறுவனங்களினூடாக வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அந்த நிறுவனங்களின் ஊடாக உரிய தரவுகளைப் பெற்று அவர்களைப் பதிவு செய்த பின்னர், பதிவு இலக்கத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சட்ட ரீதியான சிக்கல்கள் இல்லாத நிறுவனங்களில் இருந்து இந்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
Online ஊடாக வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக மிகவும் இலகுவான நடைமுறையொன்றை தயாரிப்பதே இதன் நோக்கமாகும் என அவர் கூறினார்.